ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முடியாத விடயத்தை ஹரீஸ் எம்.பி சாதித்து காட்டியுள்ளார். -வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அகமட் அவர்களின் வாழ்த்து செய்திமிக நீண்ட காலமாக கிழக்கு மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் தங்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவும் எமது கட்சியின் ஊடாக மாத்திரமே செய்ய முடியும் என்றும் தம்பட்டம் அடித்து கட்சியில் இருக்கும் யாராவது தன்னை முந்திக்கொண்டு ஏதாவது அபிவிருத்தி பணிகளை அல்லது உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து விடுவார்களேயானால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் அவர்களை சவாலுக்கு உட்படுத்துவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கடந்த காலம் தொடக்கம் இன்று வரைக்குமான செயல்பாடு ஆகும். அதனை மீறி, இன்று கல்முனையின் காவலன் என்று செல்லமாக அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான ஹரிஸ் எம்.பி அவர்கள் முயற்சியின் பலனாக நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் எமது மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் ஞாபகத்தில் அன்னாரின் பெயரில் "அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியம்" 'ஜனாதிபதியின் 25 மில்லியன் ரூபா நிதி' ஒதுக்கீட்டில் நிர்மாணம் செய்யப்பட உள்ளது. இதுவரை காலமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியில் தற்போது இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடாக முஸ்லிம்களின் உரிமைகள் எதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இவை அனைத்து சவால்களையும் முறியடித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் இப்பணி மகத்தானதும் வரவேற்கத்தக்கதுமாகும்.

அண்மை காலம் தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களை நம்பி இருக்கும் செயற்பாட்டில் இருந்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவரத் தொடங்கி தமது பிரதேச மக்களின் அபிவிருத்திகளிலும் உரிமைகளிலும் அரசுடன் போராடி தனது உரிமைகளை வென்றெடுக்க முன்வந்துள்ளது என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்(JP)
செயலாளர்.
ஜனநாயக ஐக்கிய முன்னணி(கல்குடா).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :