சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு



க.கிஷாந்தன்-
று மாதகாலமாக இடம்பெற்று வந்த சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 24.05.2024 அன்றுடன் நிறைவு பெற்றது.

சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தையும் மற்றும் பூஜைப் பொருட்களையும் புனித விக்கிரங்கள் அனைத்தும் 24.05.2024 அன்று நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு வரப்பட்டது.

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்னவினால் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜைப் பொருட்கள் புனித விக்கிரங்களை 25.05.2024 அன்று காலை 8 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்படும்.

நோட்டன் லக்ஸபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமன சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரியர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்ததாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :