சமூக பாதுகாப்பு சபை மூலமாக மாணவர்களுக்கு பண உதவிகள் வழங்கி வைப்பு




ஹஸ்பர் ஏ.எச்-
ம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த காசோலையினை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இன்று (08) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். இதில் தி/இ.கி.சாரதா வித்தியாலய மாணவியான டி.சதுர்சிகா , தி/கந்/முள்ளிப்பொத்தானை கனிஷ்ட வித்தியாலய மாணவன் ஆர்.பி.தினேத் கவின் மெத்சர ஆகியவர்களுக்கே இவ் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை ஓய்வூதிய திட்டம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் , சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :