ஆழ்கடலில் தத்தளித்த 3 வாழைச்சேனை மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்; ஒருவர் சடலமாக மீட்புஎஸ்.அஷ்ரப்கான்-
வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு ஒன்று உடைந்து அது நீரில் மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் (17) வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழைச்சேனைப்
பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இப்றாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்
பதற்காகக் கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
ஆழ்கடலில் படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தமையை (17) வெள்ளிக்கிழமை மாலை கண்டனர். தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒரு வரை சடலமாகவும் மீட்டனர்.

ஒருவர் காணாமல் போயுள்ளார். இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தமையையடுத்து அவரை திருகோணமலை
கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று வைத்தியசா
லையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மற்றையவரின் சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவு கடற்படையினர் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :