மட்டக்களப்பு,காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றி வளைப்புஅஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்ட விரோத பதிவாளர் அலுவலகமொன்று விஷேட அதிரடிப்படையினரால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டதில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 205 தரிசுக் காணிக்கான உறுதிப் பத்திரங்கள், 58 வெற்று உறுதிப் பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வமாக கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக விஷேட அதிரடிப்படையினர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :