அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் உலமா சபை ஏற்பாடு செய்த மர்ஹூம்களான உலமாக்களை நினைவு கூறலும், வருடாந்த இஃப்தார் வைபகமும் !நூருல் ஹுதா உமர்-
ல்முனை அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் உலமா சபை ஏற்பாடு செய்த மர்ஹூம்களான உலமாக்களை நினைவு கூறலும், வருடாந்த இஃப்தார் வைபகமும் உலமா சபை தலைவர் மௌலவி ரி.எம்.ஏ. ஜலீல் (பாஹவி) தலைமையில் கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று (06) நடைபெற்றது.

கல்முனை அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் உலமா சபை செயலாளர் மௌலவி ஏ.எல்.எம். நாஸர் (மன்பயீ) அவர்களின் நெறிப்படுத்தலில் காலமான உலமாக்களுக்கான நினைவுரைவும், துஆ பிராத்தனையும், மார்க்க சொற்பொழிவும் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது மசூர் தங்கள், மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது ஹிபத்துல்லாஹ் தங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ஜவாத், கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், மதரஸாக்கள் மற்றும் கலாபீடங்களின் பிரதானிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :