சிறப்பாக இடம்பெற்றுவரும் மடத்தடி மீனாட்சி அம்மனின் துவி அலங்கார உற்சவம்



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் துவி வருடாந்த அலங்கார உற்சவம் தினமும் பகல்பூஜையாக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

இரண்டாவது அலங்கார உற்சவம் புதுவருடத்தில் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது .

உற்சவகால பிரதம குரு சிவாகமவித்யா பூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெற்று வருகின்றன.

தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .

19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.

இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின் வீதியுலா இடம் பெறுகின்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது . இரவு நேர பூஜை திருவிழாக்கள் இடம்பெறமாட்டாது என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் கலாநிதி கே. ஜெயசிறில் தெரிவித்தார்.

தேசத்து ஆலயமாக விளங்குவதால் பத்து தினங்களுக்கான உற்சவகால திருவிழாக்களையும் அன்னதானத்தையும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்களான சம்மாந்துறை விநாயகபுரம் பொத்துவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி கல்முனை காரைதீவு நிந்தவூர் திருக்கோவில் ஆகிய கிராமங்கள் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :