பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாஹ்வின் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர், சபானின் முயற்சிக்கு உடனடி தீர்வு!



சாய்ந்தமருதில் வேகமாக ஏற்பட்டு வரும் கடலரிப்பால் மீனவர் கட்டிடம், பீச்பார்க், பாதை, மருதூர் சதுக்கம் என பல்வேறு மக்கள் பயன்பாட்டு தளங்கள் பாதிக்கப்படுள்ளதுடன் திடீரென நேற்று 14-04-2023 (ஞாயிறு) கடல் அதிக சீற்றம் கொண்டு இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கடலரிப்பு வேகம் அதிகரித்துள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள், மீனவ சமூகம் மற்றும் சமூக ஆர்வலக அமைப்புகள் உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு விடயத்தை எத்திவைத்ததுடன் துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறும் வேண்டுகோளை விடுத்து இருந்தார்கள்

இன்று 15-04-2024 (திங்கள்) குறித்த இடத்தை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுப்பதற்கு அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளரும், நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை மேற்பார்வையாளருமான எம்.எஸ்.எம். சபான் அவர்கள் அதிக பிரயத்தனம், முயற்சிகள் எடுத்து இருந்தார்கள்.

அவர்களின் தீவிர முயற்சியால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் பொறியியலாளர் ஆகியோர்கள் உடனடி களவிஜயம் மேற்கொண்டு கல் அணை போடும் நடவடிக்கை தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும், ஓரிரு நாட்களுக்குள் கடலரிப்பின் வேகத்தை கட்டுப்படுத்த பொறிமுறை கையாண்டு உதவுவதாகவும் பொறியியலாளர் இன்று களவிஜயத்தின் போது உறுதியளித்துள்ளார்.

இதற்காக முயற்சி செய்த, செயற்பட்டு இயங்கிய இணைப்பாளர் எம்.எஸ்.எம். சபான், பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் திணைக்கள மாவட்ட பொறியியலாளர், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :