களுவாஞ்சிக்குடியில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்.



வி.ரி. சகாதேவராஜா-
ண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் நான்காவது நிகழ்வாக மகளிருக்கான "பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாமானது" பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சோதிடரும், பாரம்பரிய சித்த வைத்தியருமான *கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்* கலந்து கொண்டு பாரம்பரிய மூலிகை மற்றும் சித்த வைத்தியம் தொடர்பான அறிவூட்டலினையும், சித்த வைத்திய ஆலோசனையினையும் வழங்கியிருந்தார்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற இந்த வைத்திய முகாமில் காலையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும், பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் உறுப்பினர்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த வைத்திய முகாம் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :