முல்லைத்தீவு மாவட்ட மாற்று திறனாளிகளின் தடகள விளையாட்டுப் போட்டிஅஸ்ஹர் இப்றாஹிம்-
மூக சேவை திணைக்களமும், முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்று திறனாளிகளின் உடல்,உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளின் அமைப்பை சேர்ந்த மற்றும் சமூக சேவை திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் இப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

லைக்கா ஞானம் பெளண்டேசன் நிதியுதவியில், சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு, பெரண்டினா, வரோட், ஓகன் ஆகிய அமைப்புகளின் அனுசணையில் இவ் விளையாட்டுப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச தடகள போட்டிகளில் சாதனைபடைத்த வீராங்கனை திருமதி சி.அகிலத்திருநாயகியும்,சிறப்பு அதிதியாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் க.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :