சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் சர்வதேச கணித தின நிகழ்வுகள்அஸ்ஹர் இப்றாஹிம்-
க்கிய நாடுகள் நாடுகள் யுனஸ்கோ அமைப்பினால் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வருடா வருடம் மார்ச் 14 ஆம் திகதி சர்வதேச கணித தின நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கமைய இவ்வருடம் 2024 ஆம் ஆண்டு “கணிதத்துடன் விளையாடுவோம்” எனும் தொனிபொருளில் நடைபெறும் சர்வதேச கணித தின நிகழ்வுகள் பாடசாலையில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய கணிதபாட உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் தலைமையில் கணித தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

நோன்பு கால விடுமுறையை கருத்தில் கொண்டு பாடசாலையின் கணிதக் கழக மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில் கணித தினம் தொடர்பாகவும் கணிதத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, கணிதத்துடன் விளையாடுவோம் எனும் தொனிபொருளுக்கு இணங்க கணிதப்பூங்காவில் மாணவர்கள் கணித விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாடசாலையின் கணிதப்பிரிவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :