குழந்தைகள் பள்ளிவாசல் சூழலோடு வளர்தெடுகப்படவேண்டும் : கிராத் போட்டி பரிசளிப்பில் எஸ்.எம்.சபீஸ்



நூருல் ஹுதா உமர்-
ள்ளிவாசல் சூழலோடு குழந்தைகள் வளரும்போது பிழையான சமூதாயம் உருவாக வாய்ப்பில்லை. அதனை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என பாலமுனை தோழமை அமைப்பினால் நடத்தப்பட்ட கிராத் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், சுமார் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்நிகழ்வில் கலந்துகொள்ள செய்து 120 மாணவ குழந்தைகளுக்கு பரிசளிப்பு வழங்குவது என்பது சிறிய விடயம் கிடையாது. அதற்காக உழைத்த தோழமை அமைப்பு தலைவர் சட்டக்கல்லூரி மாணவன் எம்.எம். அஸாம் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதே நேரம் இக்குழந்தைகளை முறையாக குர்ஆனை ஓத கற்றுக்கொடுத்து மேடையேற்றிய பெற்றோர்களின் முயற்சி இக்குழந்தைகள் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உருவாக நிச்சயம் வழிவகுக்கும். எல்லா குழந்தைகளும் பள்ளிவாசலோடு தொடர்புடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும். அதனால்தான் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் சிறுவர்கள் விளையாடும் பூங்காவினை நாங்கள் உருவாக்கினோம்

எல்லா இளைஞர்களும் பள்ளிவாசலில் அதிகநேரங்கள் செலவிடுபவர்களாக நாம் மாற்றியமைக்க வேண்டும். அவர்கள் பள்ளிவாசலை நோக்கி வரக்கூடிய சூழலை நாம் உருவாக்கவும் வேண்டும். அவ்வாறில்லாமல் போனதால் பல நாடுகளில் ஆன்மீக நிலையங்கள் உருவாக்கப்பட்டு நல்வழிப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :