சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு பிரயோக விஞ்ஞான பீட நவ்ஸ் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்பு!ம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் அமைப்பான நவ்ஸ் எனும் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்புச் செய்தார்.

சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களது சார்பில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் அமைப்பின் ஆலோசகருமான எம்.சி. பர்ஷான் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் அமைப்பாளர் ஏ. அபூபக்கர் ஆகியோர் குறித்த ஈத்தம் பழங்களை நவ்ஸ் அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முகம்மட் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கி வைத்தனர்.


 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :