சுசித்ரா எல்ல அவர்களுக்கு "Worlds Most Powerful Woman" விருது வழங்கி வைப்பு



அபு அலா -
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வு இன்று (10) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரைக் காத்த உன்னத பெண்ணை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் "Worlds Most Powerful Woman" எனும் விருதை வழங்கி கெளரவித்தார்.
அத்துடன், 1880 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பெண் ஒருவர் தேயிலை பறிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருமதி சுசித்ரா எல்லவுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் திருகோணமலையில் கல்வித்துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகளில் சாதனைகள் நிலைநாட்டிய பெண்கள், கலாசார நிகழ்வுகளில் சாதனை படைத்த பெண்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல, எம்.எஸ் .தௌபிக், பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :