சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு ஒரு தொகுதி கதிரைகள் அன்பளிப்பு!சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலையில் நடைபெறும் பெற்றார் கூட்டங்களுக்கு 200 கதிரைகளை ஒன்றுதிரட்டும் செயற்றிட்டத்தில் ரூபா 75,000 நிதியில் 25 கதிரைகள் முதல் கட்டமாக இன்று Rizley Mustafa Education Aid மூலமாக அதன் தலைவரும் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் அரசியல் வாரிசுமான றிஸ்லி முஸ்தபா அவர்களால் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் M.I.M.றியாஸ் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
பாடசாலையின் அதிபர் M.I.M. இல்லியாஸ் தலைமையின் இடம்பெற்ற இக்கையளிப்பு நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவியதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், SDEC உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது பாடசாலை அதிபர் M.I.M.இல்லியாஸ் அவர்களால் பாடசாலை சமூகம் சார்பாக றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கபட்டது.
மேலும் SDEC யினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு தேவையான 200 கதிரைகளைச் சேகரிக்கும் திட்டம் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் வெற்றிகரமாக இடம்பெறுவதோடு இதுவரை 135 கதிரைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :