நற்பிரஜைகளாக திகழ கல்வியோடு சமூக சிந்தனையும் அவசியம் : இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம். சபீஸ்.



நூருல் ஹுதா உமர்-
ளைஞர்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேரம் கிடைக்கும் வேளைகளில் சமூகப் பணிகளிலும் சமூக சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று சமூக சிந்தனையும் முக்கியமாகும். காரணம் ஒரு சிலர் இனவாதத்தையும், மற்றவர்களை குறைகூறி மக்களை முட்டாளாக்கி அதிகாரத்துக்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களால் எமது சமூகம் எந்தவேளையிலும் முன்னேறவில்லை.

அதனால் நாம் ஒட்டுமொத்த சமூகமும் அறிவார்ந்த சமூகமாக முன்னேற தேவையான திட்டங்களையும், எமது இளைஞர்கள் புதிய தொழில் முயற்சியாளர்களாக வளரக்கூடிய வழிவகைகளையும், நமது மக்களின் ஏற்றத்தாழ்வினை சீர்செய்யக்கூடிய பொருளாதார திட்டங்களையும், அவர்களின் வாழ்வியல் உறுதிப்பாட்டிற்கான வழிவகைகளையும் எவ்வாறு முன்கொண்டு வரலாம் என்ற சிந்தனையோடு கல்வி பயிலுங்கள் நிச்சயம் எமது சமூகமும், நாடும் முன்னேறும் என தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :