மொகிதீன் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய முதலாம் தர வகுப்பு மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைப்பு.எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
நேற்று 22.02.2024 திகதி வியாழக்கிழமை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் அவர்களின் தலைமையில் இந்த வருடம் முதலாம் தரத்தில் இணைந்து கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் பாடசாலை அதிபர் மொகிதீன் சனசமூக நிலைய நிருவாகத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக உத்தியோகத்தர்கள் ஏ.ஹாரூன் அவர்களின் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஊக்கமளிக்கும் முகமாக இன்று முதல் பாடசாலையில் கல்வியில் இணைந்து கொள்ளும் சிறார்களுக்கான பாடசாலை பைகளை மொகிதீன் சனசமூக நிலைய நிருவாகத்தினரான தலைவர் ஏ.ஜி.அஸ்லம், செயலாளர் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், பொருளாளர் பிஸ்தாமி ரவூப், நிருவாக உறுப்பினர் டி.கே.அனீம் ஆகியோரின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக எம்.ஐ.எம்.அஹ்சாப். உதவிக் கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மற்றும் எமது அதிதிகளாக எச்.எம்.தாஹிர் அதிபர் அந்நூர் தேசிய பாடசாலை ,எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அதிபர் ஓட்டமாவடி தேசிய பாடசாலை,பாடசாலை அபிவிருத்தி குழு தலைவர் எம்.ஆப்தீன், நூரியா ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.ஹுசைன், மொகைதீன் தைக்கா பள்ளிவாசல் தலைவர் எம்.பி.எம்.ரொஷான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பாக மொகிதீன் சனசமூக நிலையம் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் கல்வி,கலாச்சார,சமூக செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பல்வேறு வகையான பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :