நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்ட நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பல்லாண்டு மூலிகை கன்றுகளை நடுதல் திட்டத்தில் சுவதரணி மூலிகை பயிர் வாரத்தை முன்னிட்டு பயிர்கன்றுகள் வினியோகிக்கப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அத்துடன் விஷேட தேவையுடைய ஒருவருக்கு சமுக சேவை திணைக்களத்தினால் சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment