காரைதீவு- மாவடிப்பள்ளி வீதியும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது : மக்கள் இல்லிடங்களை விட்டு வெளியேறினர்.நூருல் ஹுதா உமர்-
காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன பாலத்திற்கும் இடையில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்னும் மழைபெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது.

மட்டுமின்றி தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலைபோன்று காட்சியளிப்பதுடன் வீதி ஓரங்களில் மீன்பிடி நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டுவருவதையும் காணக்கூடியதாக உள்ளதுடன் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் வீடுகள் பலதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் கிராம மக்களில் சிலரும் தமது விடுகளிலிருந்து வெளியாகி பாதுகாப்பான இடங்களை நோக்கியும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றுள்ளனர்.

வெள்ளநீர் தேங்கியமையால் கல்முனை - அக்கரைப்பற்று காபட் வீதிகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதுடன் வாகன போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :