ராஜபக்ச பொருளாதார பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமத (வலையொளி இணைப்பு)நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்சர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ச பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ச மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.ராஜபக்ச மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ச மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்சர்களின் கைகளிலயே உள்ளன. இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :