கிண்ணியா மஸ்ஜிதுல் ஹிஜ்ரா ஜும்ஆப் பள்ளிவாயல் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும்




எம்.ஏ.முகமட்-
கிண்ணியா மஸ்ஜிதுல் ஹிஜ்ரா ஜும்ஆப் பள்ளிவாயல் ஏற்பாட்டில் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா மாணவர் மற்றும் மாணவிகளின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டுபரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும் பள்ளி வாயல் மண்டபத்தில் (28) நடைபெற்றது.

1_7 வரையான ஜுஸுக்களை மனனமிட்ட மாணவ மற்றும் மாணவிகள்,பள்ளி நிர்வாகத்திற்குட் பட்ட 2022/2023ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண பரீட்சையில் 9ஏ சித்திந பெற்ற இரு மாணவர்கள்,பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப் பட்ட மருத்துவத் துறைக்கு ஒருவரும், பொறியல் துறைக்கு ஒருவரும்,கலைத் துறைக்கு ஐவரும்,தொழில்நுட்பத் துறைக்கும ஒருவரும் தெரிவு செய்யப் பட்டு கௌரவிக்கப் பட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மகரூப்,கௌரவ அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,அஷ்ஷெய்ஹ் பாஹிர் (றியாதி ),
விசேட விருந்தினர்களாக அனைத்து பள்ளிகரள் சம்மேளன தலைவர் ஏ.எஸ்.எம்.யுனைதீன்,ரீ.பி.ஜாயா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜீம்,,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிண்ணியாக் கிளை உறுப்பினர் மாஹிர் மௌலவி,ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :