ஏறாவூரில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.



உமர் அறபாத் - ஏறாவூர்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் காணப்படுகின்ற ஏறாவூர் மிச்நகர் பிரதேசங்களில் 06/01/2024 சனிக்கிழமை அன்று விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு டெங்கின் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிப்புக்கு அலட்சியமாக செயற்பட்டோருக்கு எதிராக பொலிசாரினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டதுடன் பலருக்கு அறிவுறுத்தலும் இதன்போது வழங்கப்பட்டன.

மேலும் டெங்கு பரவக்கூடிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேசபை ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் பங்களிப்பு மூலம் மிச்நகர் பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட்டது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .ஸாபிறா வசீம் தலைமையில் இடம்பெற்ற இவ்விஷேட வேலைத்திட்டத்தில் பொலிசார், மற்றும்
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள்,
பொதுச்சுகாதார பயிலுனர்கள், டெங்கு கள உதவியாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏறாவூர் நகரசபை ,ஏறாவூர் பற்று பிரதேசசபை ஊழியர்கள் மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா ஏறாவூர் கிளை,
ஏறாவூர் வர்த்தக சங்கம், PSP சமூகசேவை அமைப்பு, voice of eravur ,
மக்கள் அபிவிருத்தி ஒன்றியம், SSDO போன்ற சமூக அமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்ட பின் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் G.சுகுணன் சேர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :