இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்கள் பிரியாவிடை நிகழ்வுமுஸ்தபா முபாறக்-
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தினால் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை (18 நாட்கள்) வெற்றிகரமாக பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர், 2023 சாய்ந்தமருது கலாசார நிலைய மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் (கலாநிதி) ரமீஸ் அபூபக்கர், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிதி உதவியாளர் எம்.எஸ்.எம். றியாஸ், விஷேட அதிதிகளாக தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தின் சிங்கள மொழிக் கற்கை நெறிக்கான வளவாளரும் திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்

பி. சந்திரகுமாரி, தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தின் சிங்கள மொழிக் கற்கை நெறிக்கான வளவாளர், மொழிபெயர்ப்பாளர், கல்முனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.பி. ஆமினா
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் (கலாநிதி) ரமீஸ் அபூபக்கர் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தர்:

இந்த சிங்கள கற்கை நெறியானது வெறுமனே சம்பள உயர்வுக்கு மாத்திரமல்லாது எமது அன்றாட வாழ்வுக்கு மிக முக்கியமான ஒரு மொழியாகவும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு இன்றியமையாத ஒரு திறவுகோலாவும் இது காணப்படுகின்றது. இவ்விடத்தில் மறைந்த

தலைவர் மர்ஹும். எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் கருத்தினையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தார். இலங்கையில் ஒருவர் சம்பூரணமாக வாழ வேண்டுமாக இருந்தால் முன்மொழிகளும் தெரிந்து இருக்க வேண்டும் என்ற விடயத்தையும் இந்த இடத்தில் முன்வைத்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் நேர்முக பரீட்சை, தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ளல், வெளி மாவட்டங்களில் சிங்கள மொழியில் அலுவலக வேலைகளை மேற்கொள்ளும் போதும் இவ் மொழி ஆளுமை பிரதான இடத்தினை பெறுகின்றது. கிழக்கு மாகாணத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும்போது உதாரணமாக: மேல், ஊவா, சபரமுக மாகாணங்கள் போன்ற பல மாகாணங்களுக்கு செல்லுகின்ற போது அங்கு பிரதான மொழிகளாக சிங்களமே காணப்படுகின்றது. எனவே இக்கற்கை நெறியோ இத்தோடு விட்டு விடாமல் வாழ்க்கையில் தொடர்ந்தேர்ச்சியாக கற்று தேர்ச்சி பெற வேண்டும் என பல்வேறு வகையிலான ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பொன்னாடை மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

18 நாட்களாக இடம்பெற்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களினால் சிங்கள மொழியினை அடிப்படையாக கொண்ட கலை கலாசார மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :