சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலை பரிசளிப்பு விழா -2023!ஏறாவூர் சாதிக் அகமட்-
ட் /ககு/ சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலை பரிசளிப்பு விழா -2023 அதிபர் திரு சி சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையும் சமூகமும் இணைந்து நடாத்திய இவ்விழாவில் பிரதம அதிதியாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாளேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக வலயக் கல்வி பணிப்பாளர்களான திரு .தி. ரவி, திரு .த. அனந்தரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சமய குருமார்கள் கல்வி அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள்பாடசாலைகளின் அதிபர்கள்பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர். 10 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இப்பரிசளிப்பு விழாவில் சகல துறைகளிலும் பிரகாசித்த 220 ம் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கௌரவித்து பாராட்டப்பட்டனர்.

அதிலே பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் 08 பேர் சாதாரண பரீட்சையில் 5A அதிகமான உயர் பெறுபேறுகளை பெற்றோர் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்ற 18 மாணவர்கள் விளையாட்டு அழகியல் உள்ளிட்ட பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் போட்டிகளில் மாகாண தேசிய மட்ட சாதனையாளர்கள் என கௌரவிக்கப்பட்டதுடன் இதற்காக தங்களை அர்ப்பணித்த அதிபர் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதிலே பாடசாலை இவ்வருடம் 1AB ஆக தரமுயர்த்தப்பட்டதுடன் இதற்கான சிபார்சினை செய்து கொடுத்த கௌரவ அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாடசாலை சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :