நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான அக்கரைப்பற்று பிரதேச மாணவர்களுக்கு துறைசார் வல்லுனர்களின் ஆலோசனை செயலமர்வுஅஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி தம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க காத்திருக்கும் மாணவர்களுக்கு துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளையும் சிரேஷ்ட மாணவர்களின் அனுபவப்பகிர்வுகளையும் உள்ளடக்கிய செயலமர்வு அக்கரைப்பற்று இளமானி பட்டப் பயிலுனர் சங்கம் மற்றும் ஐகோனிக் யூத் (Iconic youths) அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாக இருக்கின்ற ஏராளமான மாணவர்கள் இதில் பங்கு பற்றி பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிமுகம், பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்புகள், நேர முகாமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான பல்வேறு காத்திரமான விடையங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக
சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எப்.எச்.இஸட். சிப்லி அஹமட், எம்.அப்துல் றஸாக் மற்றும் செல்வி.எம்.ஐ.பாத்திமா நிஹ்லா
ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :