பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் மாணவி சஜா வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை.


எச்.எம்.எம்.பர்ஸான்-

வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மாணவி ஹயாத்து முகம்மது பாத்திமா சஜா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எல்.ரீ.எம்.சாதிக்கீன் தெரிவித்தார்.

பரீட்சையில் தோற்றிய இம் மாணவி 188 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு சாதனை படைத்த மாணவியையும் கற்பித்த ஆசிரியை எம்.எம்.சனூபாவையும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் நேரில் சென்று பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :