பிரேசிலில் நடந்த உலகளாவிய கருத்தரங்கில் இலங்கியில் இருந்து சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டார்.

Club De Madrid
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவகார திட்டத்தில் ஓர் பகுதியாக ஜனநாயக ரீதியிலான இளைஞர்களின் மற்றும் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக உலக நாடுகளை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் 35 வயதிற்கு குறைவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியலில் தாக்கம் செலுத்தும் இளைஞர்களை கொண்ட "இளம் முடிவெடுப்பவர்களின் கொள்கை ஆய்வக வலையமைப்பு 2023" என்னும் தொனிப்பொருளில் பிரேசில் நாட்டில் தலைநகரில் நடந்த கருத்தரங்கில் இலங்கை சார்பாக பல விண்ணப்பங்களுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டு விசேட அழைப்பின் பெயரில் பாராளுமன்ற சாணக்கியன் மாத்திரம் பங்குபற்றியிருந்தார். 

இதில் பல நாடுகளின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் பங்கேற்றிருந்தார்கள் இவ் கருத்தரங்கில் மிக முக்கியமாக மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது இதன் மூலம் சர்வதேச ரீதியலான ஓர் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது இவ் செயலமர்வின் முக்கிய கருப்பொருளாகும். 

இவ் குழுவில் இலங்கை சார்பாக இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்களும் நானும் உறுப்பினர்களாக உள்ளோம். 

இவ் அமர்வின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவியான மிசேல் பசிலே அவர்களை சந்தித்திருந்தேன் இலங்கை தொடர்பான அறிக்கைகள் பல இவரது காலத்தில் வெளியிடப்படிருந்தது. 

அவை தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

மற்றும் இலங்கைக்கான பிரேசில் தூதுவருடன் ஓர் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது பிரேசில் நாட்டில் மிகப் பாரிய பொருளாதாரமாக இருப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியாகும். 

எமது நாட்டில் இருக்கும் கால்நடைகளுக்கு இயற்கையாவே அமைந்த மேய்ச்சல் தரவெளிகளான மயிலத்தமடு மாதவனை போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள அபகரிப்புகள் தொடர்பிலும் மற்றும் எமது கால்நடைகளை வளர்ப்பினை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் மற்றும் கால்நடை பால் உற்பத்திகளை அதிகரிக்க தேவையான நவீன உபகரணங்கள் தொடர்பிலும் எமது கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :