இளம் வயதில் பல்துறைசார் சாதனைப்பெண்ணாக தடம்பதித்த உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர்!



பாறுக் ஷிஹான்-
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா பஷீனா தம்பதியினருக்குப் பிறந்தவர் நுஷைபா நஷீர். இவரது தந்தை கல்முனை சணச அபிவிருத்தி வங்கியில் கணக்காளராகப் பணி புரிகின்றார். இவரது தாய் வீட்டு மனையாளாக இருக்கிறார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
இவர் தரம் 01 இலிருந்து உயர்தரம் வரையிலான கல்வியை கமு/கமு/அல் மஷ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்றார். அப்பாடசாலையில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்தார்.
இவர் பாடசாலைக் காலத்தில் பாடசாலையில் முதலுதவி, சுற்றாடல் கழகம், இசை வாத்தியக்குழு, சுகாதாரக்கழகம், மாணவர் பாராளுமன்றம் அதிலும் கூடிய வாக்குகளைப்பெற்று பாடசாலையில் தெரிவு செய்யப்பட்டமையும் பாடசாலையில் சுற்றாடல் அமைச்சராகத்தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
மேலும், சுற்றாடல் கழகத்தில் முன்னோடிப்பதக்கம், மஞ்சள் வர்ணப்பதக்கம், பச்சை வர்ணப்பதக்கம், வெள்ளி வர்ணப்பதக்கம், தங்க வர்ணப்பதக்கம், ஜனாதிபதிப்பதக்கம் என பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ், ஆங்கில மற்றும் சிங்கள தினபோட்டி என அனைத்திலும் பங்கு கொண்டுள்ளார். வகுப்புத் தலைவராகவும் அனைத்திலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.
இவர் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைகழகம் தெரிவாகியும் கூட சில சூழ்நிலை காரணமாக பல்கலைகழகம் செல்ல முடியாமல் போயிற்று.
எனினும், முயற்சியைக்கைவிடாது, தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தில் சமூக சேவையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார். வெளிவாரியாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர், Diploma in Counseling Psychology, Diploma in English, Diploma in Sinhala, Diploma in Human Resource Management, Pre Metrial Counseling, Child Psychology போன்ற கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்துள்ளார்.
அதனோடு மார்க்கக்கல்வியினையும் பூர்த்தி செய்துள்ளதுடன், Beauty Culture and Henna Course இனையும் பூர்த்தி செய்துள்ளார்.
தற்போது சட்டத்துறையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதோடு, B.ed ஐயும் இலங்கை கல்லூரியொன்றிலும் செய்து கொண்டு சமூக விஞ்ஞானிகள் சங்க ஆராய்ச்சியாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
இவர் பொழுதுபோக்காக புத்தகங்களை விரும்பிப் படிப்பார். அதுவே இலக்கியத்துறையில் இவரை காலடியெடுத்து வைக்கக் காரணமாயிற்று. எனவே இவர் ஒரு எழுத்தாளராகவும் கவிதாயினியாகவும் காணப்படுகின்றார்.
சிகரம் சஞ்சிகை ஆசிரியர் குழுவிலும் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையில் உறுப்பினராகவும் பத்திரிகையாளராகவும் (journalist) பணி புரிந்து வருகின்றார்.
Story Telling மற்றும் Short Film Maker ஆகவும் காணப்படுகிறார். Motivational Speaker என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரீ லங்கா பென் கிளப், தூரிகை, முற்றம் அம்பாறை மாவட்ட கலைஞர்கள் எனப்பல எழுத்தாளர்கள் குழுவிலும் பல கவிதை குழுமங்களிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றார்.
சிறந்த கவிதை எழுதுவதனால் கவிச்சிகரம் என்ற புனைப்பெயர் இவருக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ஊடகத்துறையிலும் இவரது பயணம் வியாபித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஸ்கை தமிழ் மீடியாவில் பத்திரிகையாளராகவும் Guru tv இல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் முத்தூறல் மற்றும் சிலோன் நிவ்ஸ் இல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் KK Media இல் நிகழ்ச்சிt தொகுப்பாளராகவும் LACSDO மீடியா உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.
இவர் Edu Free Academy யில் நிர்வாக உறுப்பினராக கல்விக்கான செயற்றிட்டத்தில் பங்கு கொண்டு செயற்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்கு, வினாத்தாள் விநியோகப் பணிகளில் ஈடுபட்டுச் செயற்பட்டுள்ளார்.
Institute for Free Education இல் தொண்டராகச் செயற்பட்டுள்ளார். மேலும், Eclat Unites இல் எழுத்துத்துறையில் பயணித்துள்ளார். அது மட்டுமல்லாது, Eclat units உடன் இணைந்து உயர், சாதாரணதர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கை நடாத்தியுள்ளார். இதில் grow green செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் சமூகத்தில் ஒரு முன்மாதிரியான சமுக ஆர்வலராகவும் பயணித்துக்கொண்டிருக்கின்றார்.
இவரது முதல் இளைஞர் கழகத்துடனான பயணம் ycli அதாவது, youth community leadership initative உடன் ஆரம்பமானது எனக்குறிப்பிடுகின்றார்.
பின்னர் CPBR (central for peace building and Reconciliation ), undp (United nations development programs) hekadav, family planning association அதிலும் கிழக்கு மாகாணத்தில் mojo fellowship இலும் பணி புரிந்து சமூகத்திலுள்ள பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை குறும்படம் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பது சிறப்பான விடயமாகும்.
இவரது துறைசார் பணிகள் எண்ணிலடங்காதவை என்றே குறிப்பிடலாம். அவையாவன, இவர் Human rights organization இலும் ஒரு அங்கத்தவராகவும் பணியாற்றி வருகின்றார். Eastern youths organization இல் அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளராகக் கடமையாற்றுகின்றார். Human development association இல் நிந்தவூர் அமைப்பாளராகப் பணியாற்றுகின்றார். green east இன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுகின்றார். women lioness அமைப்பினுடைய நிறுவனராகவும் இருக்கின்றார்.
Mission green இனுடைய தொண்டராகவும் செயற்படுகின்றார். சர்வோதய மனோஹரி நிகழ்ச்சித் திட்ட TOT ஆகவும் செயற்படுகின்றார். Srilanka youth alliance இனுடைய உறுப்பினராகவும் செயற்படுகின்றார். Iconic youths srilanka இனுடைய நிந்தவூர் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். women in managment srilanka இன் new genaration இனுடைய அங்கத்தவராகவும் பல செயற்றிட்டங்களிலும் செயற்படுகின்றார். unity mission trust இல் அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். leo மற்றும் lion இனுடைய அங்கத்தவராகவும் Coroatia நாட்டினுடைய தூதுவராகவும் செயற்படுகின்றார்.
kapppom organization இல் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் USA செயற்றிட்ட அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகவும் செயற்படுகின்றார்.
ayevac அதாவது alliance of youth to end violence against children அமைப்பினுடைய அம்பாறை மாவட்டத்தலைவாராகவும் கை கொடுக்கும் கரங்களினுடைய அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். peace and community action இனுடைய நிந்தவூர் உறுப்பினராகக் காணப்படுகின்றார். eclat unites இனுடைய உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.
மேலும், நிகழ்வுகளின் வளவாளராகவும் செயற்படுகின்றார். bay organization இல் தொண்டராகப் பணியாற்றுகின்றார். Youth democracy alliance இல் உறுப்பினராகச் செயற்படுகின்றார். women empowerment association இல் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
Global youths biodiversity network இல் volunteer தொண்டராகவும் இருக்கின்றார். அம்பாறை மாவட்ட youth fedaration இல் உறுப்பினராகச் செயற்படுகின்றார். International youth alliance for peace இனுடைய global volunteer ஆக செயற்படுகின்றார்.
ESDF இன் youth peace advocates செயற்றிட்ட அங்கத்தவராகக் காணப்படுகின்றார். Smart Teach Academy இல் ஆசிரியராகவும் நிறுவனராகவும் காணப்படுகின்றார். Sunfo global federation இல் அங்கத்தவராக இருக்கின்றார். Zero plastic அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுகின்றார்.
CP arts கலா மன்றத்தினுடைய அங்கத்தவராகவும் Srilanka unites இல் தொண்டராகவும் உறுப்பினராகவும் பணி புரிகின்றார்.
Top and hit maas production இல் அங்கத்தவராகவும் Pond social service இனுடைய அங்கத்தவராகவும் Islam is my religion எனும் இஸ்லாமிய பதிவுகளை இடும் குழுவின் தலைவராகவும் NAFSO அமைப்பின் அங்கத்தவராகவும் Rotaract and rotary club அங்கத்தவராகவும் காணப்படுகின்றார்.
United mission trust இனுடைய உறுப்பினராகவும் Create pool இனுடைய அங்கத்தவராகவும் இந்தியாவிலுள்ள இலக்கிய குழுமப் பொறுப்புக்களிலும் காணப்படுகின்றார்.
உளவியல் ஆலோசகராகவும் youth leadership வளவாளராகவும் பணி புரிந்து பிரதேசத்தில் சமூக சேவையாற்றி வருகின்றமையும் பின் தங்கிய குடும்பத்தைச்சேர்ந்தவரது தேவைகளை அறிந்து உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், இவர் CIML இனாலும் பல்கலைகழகங்கள் இணைந்து நடாத்திய mojo traning இல் செயற்பட்டுள்ளார். youth advocacy network srilanka இனுடைய sexual and reproducting சம்மந்தமான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
SLPI இனால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளருக்கான நிகழ்வில் இளம் ஊடகவியலாளராகக் கலந்து கொண்டுள்ளார். yes hub இனால் நடாத்தப்பட்ட environment innovation சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். amazon கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளதுடன் beruwala news alert இல் அம்பாறை மாவட்ட செய்தியாளராக குறிப்பிடத்தக்களவு பணி புரிந்தார். Minnal radio fm இல் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவரது திறமைகள் ஒரு குறித்த வட்டத்தில் முடங்கிப் போகாமல் photography துறையிலும் art மற்றும் craft painting இலும் வெளிக்காட்டப்படுகின்றன.
மேலும் இவரது பகுதிநேரச்செயற்பாடாக தோட்டம் செய்தல், இசைக்கருவிகளை வாசிப்பதாகும்.இவர் பெற்றுக்கொண்ட வெற்றிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
அண்மையில் International achivers foundation இனால் women achivers award இற்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், LACSDO media இன் திறமைக்கான விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவினுடைய production for legal & human rights foundation இனால் women's day இனை முன்னிட்டு sprit of humanity award கிடைக்கப் பெற்றது என்பது முக்கிய அம்சமாகும்.
pen club national conference இல் விருது, eastern youths organization இன் 4வது ஆண்டுவிழாவினை முன்னிட்டு விருது கிடைக்கப்பெற்றதுடன், அண்மையில் இவரது டிப்ளோமா படிப்பினை நிறைவு செய்து பட்டமளிப்பு விழா நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் சவால்கள் வெற்றிக்கான படியாகவே கருதுகின்றார். இவரைச்சுற்றி பல விமர்சனங்களும் தவறான கதைகளும் வந்த போதிலும், இவர் நம்பிக்கையினை இழக்கவில்லை. இவருக்கு மனதில் இருந்த விடயம் நான் இன்னும் சாதித்து சிகரம் தொட வேண்டுமென்பதே இவரது அவாவாக இருந்தது.
இதற்கு இவரின் தாய், தந்தைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன் என இவ்வேளையில் கூறிக்கொள்கிறார். அவர்களின் ஊக்கமும் முயற்சியுமே இவர் வெற்றி பெறக்காரணமாக இருந்தது. அது மட்டுமல்லாது, இவரது சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு, இவரது நண்பர்களின் ஒத்துழைப்பு, ஆறுதலான வார்த்தைகள் மற்றும் குடும்பத்தினுடைய ஒத்துழைப்பு இவையனைத்துமே இவர் உச்சம் தொடக் காரணமாக இருந்தது எனக்குறிப்பிடுகின்றார்.
இவரது குடும்ப பின்னணியினை பொறுத்த வரைக்கும் முன்மாதிரியான படித்தவர்கள், சிறந்த குடும்பக் கட்டமைப்பு, வழிகாட்டல், அறிவுரை என அவர்களது வழிகாட்டல்கள் காணப்பட்டது.
அவர்களின் முன்மாதிரியே இவரை சமூகத்தில் முன்மாதிரியாக மிளிர வைத்தது என்பதைக் குறிப்பிடுகின்றார். இவரின் எதிர்கால இலட்சியம் ஒரு சட்டத்தரணியாக வர வேண்டுமென்பதாகும். சமூகத்தில் ஒரு முன்மாதிரியான சமூக ஆர்வலராகவும் வர வேண்டுமென்பதோடு அரசியலிலும் நுழைந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
சமூகத்துக்கு கூற எத்தனிக்கும் கருத்துக்கள்
● சமூகத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சாதிக்க வேண்டும்.
● பெண்களும் தலைமைத்துவத்திற்கு வர வேண்டும். அந்த வகையில், சவால்கள், பிரச்சினைகள் எமக்கு வரும் நாமும் சலைத்து விடாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லையென்றால் வாழ்க்கை சுவாரஷ்யம் இல்லாமல் போய் சமநிலையற்று போய் விடும்.
● எமக்கு வரும் விமர்சனங்களே எம்மை ஒரு படி உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கையின் அடுத்த படி எடுத்து செல்ல வேண்டும்.
இளம் வயதிலே பல துறைசார் சாதனைகளை தன் வசப்படுத்திக்கொண்ட நுஷைபா நஷீர் அவர்களின் எதிர்கால இலட்சியங்கள் நிறைவேற வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு வாழ்த்துகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :