சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே பிரதேசத்தில், சர்வதேச தரத்திலான மரதன் ஓட்டப்போட்டி உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்புஓட்ட வீரர்கள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை செய்துகொள்ள முடியும்.
றியாஸ் ஆதம்-

றுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.

Run Arugam Bay 'Half Marathon' போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும், ஊடகவியலாளர் மாநாடும் நேற்று (10) அறுகம்பே றாம்ஸ் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் 5வது தடவையாகவும் இம்மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

”இலங்கைக்கு வாருங்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மரதன் போட்டியினை மேலும் சிறப்பாக நடாத்துவதற்கு சுற்றுலாத்துறை மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் எமது அமைப்புடன் கைகோர்த்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கொரேனா அனர்த்தத்தினால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமைகள் மாற்றமடைந்து தற்போது சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்து வருகின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்து காணப்படுகிறது. இக்காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்தவுள்ளோம்.

இப்போட்டி நிகழ்ச்சியில் உள்நாட்டு. வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளதுடன், எமது பிரதேச மரதன் ஓட்ட வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பிரதேச வீரர்களையும் இதில் பங்கேற்குமாறு அழைக்கின்றோம். குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், சான்றுதழ்களும் வழங்கவுள்ளோம்.

இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது பெயர்களை 0767016888 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற, மேற்படி நிகழ்வில் இராணுவத்தின் 242வது படையணியின் சிவில் விவகார அதிகாரி கேணல் பிரசன்ன டீ சில்வா, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹிம், அறுகம்பே விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி டீ.எம்.ஆர்.செனவிரத்ன, பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ஏ.ஆர்.திசாநாயக்க, அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், ஒன்றியத்தின் பொருளாளர் ஏ.ஜி.அமீர் அலி, உயர்பீட உறுப்பினர்களான எம்.எஸ்.ஏ.நாசர் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), எம்.என்.டில்ஷாத் அஹமட், எம்.எம் பைசர், எச்.எம்.இமாம் மற்றும் ஆலோசகர்களான எம்.என்.நியாஸ் மௌலவி, ஐ.எல்.இப்றாஹீம் (ஆசிரியர்), ஐ.எல்.அபூபக்கர் (ஆசிரியர்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :