ஹக்கீம் + ஹிஸ்புழ்ழாஹ் + அலி ஸாஹிர் - கிழக்கின் ஆளுநர் செந்திலுடன் அவசர சந்திப்பு.கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் மற்றும் தற்போது எழுந்துள்ள ஏறாவூர் நகர சபைப்பிரிவில் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் காணிப்பிரைச்சினைகள் தொடர்பிலான அவசர சந்திப்பொன்று கொழும்பில் உள்ள ஆளுநரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் போது கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் ஏற்படும் முரண்பாடுகளை சுமூகமான வகையில் தீர்த்துக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதுடன் தேவை ஏற்படின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி எந்த வகையிலும் பொது மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :