உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களுக்கு இழைக்கப்படுவது அநீதி2023 தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் சுமார் 4 மாதங்கள் சம்பளம் இன்றி உள்ளுராட்சி சபைகளில் ஒரு கற்ற சமுதாய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்ட வேண்டும் என்று எண்ணியும் அரச உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் தேர்தல் கேட்ட அரச ஊழியர்களை அரசாங்கம் தொடர்ந்து நோகடிப்பது அடிப்படை உரிமை மீறலாகும்.

அது மட்டுமல்லாது சம்பளம் இல்லாது தேர்தலில் போட்டியிட்ட ஊழியர்கள் மிக கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து இருக்கின்ற நிலையில் தொடர்ந்து தூர இடங்களில் அவர்களை பணி புரிய செய்வது (பிரதேச சபை எல்லைக்கு அப்பால் ) என்பது ஒரு பிழையான செயலாகும்

எனவே குறிந்த தேர்தல் தொடர்பாக ஒரு முடிவினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதுடன் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களை உடன் பழைய நிலையங்களுக்கு அவர்களை பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை நேசிக்கின்ற நாங்கள் மானசீகமாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்

மேற்படி விடயத்தில் அரசாங்கம் முறையான முடிவுகளை தராத நிலையில் மிக விரைவில் நீதியை பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்

அத்துடன் தேர்தல் கேட்ட அரச ஊழியர்களை ஒன்றிணைக்கும் வகையில் whatsapp குழு ஒன்று ஆரம்பித்துள்ளோம் நீங்களும் இணைந்துகொள்ள 0752111007 எனும் இலக்கத்திற்கு விபரத்தை அனுப்பிவைக்கவும்

ரபீக் சராஜ்
தேர்தல் கேட்ட அரச ஊழியர்கள் சார்பாக
திருகோணமலை மாவட்டம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :