DAS கப்ரோத்தின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமீபத்திய பேரினப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமைகள் மற்றும் அவை தொடர்பான கண்ணோட்டம் பற்றிய ஒரு தெளிவான புரிதலைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாக அமைந்தது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த தூதுவர் சங் மற்றும் DAS கப்ரோத் ஆகியோர் இலங்கையின் பொருளாதார சவால்களை முறியடிப்பதற்கும் அதன் கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களைத் தொடர்வதற்கும் தனது ஈடுபாடும் ஆதரவும் உதவியாக அமையக்கூடிய விடயப்பரப்புகள் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்தும் ஆராயும் என மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடனான சந்திப்புகளையும் இவ்விஜயம் உள்ளடக்கியிருந்தது.
இலங்கை தனது சீர்திருத்தங்களை ஆழப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கும் உதவி செய்வதற்கு அவசியமான தொடர்பாடல்களையும் ஒருங்கிணைப்பையும் மேலும் அதிகரிப்பதற்காக DAS கப்ரோத், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளையும் சந்தித்தார்.
0 comments :
Post a Comment