அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்று கூடல்



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காலை முதல் மாலை வரை சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் பாடசாலையில் வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் தேசிய கொடி பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு தேசிய பாடசாலை கீதங்கள் இயற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வின் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.குறித்த வரவேற்புரையினை முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியும் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவியுமான ஆரிகா காரியப்பர் நிகழ்த்தினார்.

மேலும் தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் மேற்கொண்டதுடன் அண்மைக்காலமாக பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற செயலில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் சமூக ஊடகங்களில் போலி அடையாளங்களுடன் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்வோர் உண்மையான தகவல்களை பெற்று அதனை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும்இ உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப்.நஸ்மியா சனூஸ் உரையாற்றி நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ அஸ்தர் பாடசாலை பழைய மாணவிகள் சங்க பிரதித்தலைவரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் ஓவியக்கண்காட்சி மைதான நிகழ்வு சிறுவர்களின் நடனம் உட்பட பழைய மாணவிகளின் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை)யின் பவளவிழா நிகழ்வின் ஒரு கட்டமான மேற்படி நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :