உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜீ இலங்கை வருகை!வி.ரி.சகாதேவராஜா-
லகளாவிய ராமகிருஷ்ணமடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான அதிவண ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மஹராஜ் 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 18 ஆம் தேதி இலங்கை வருகிறார்.
இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அவர், மட்டக்களப்பில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார் .
மே 18ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆசிரமம் வரை பொது வரவேற்பு நடைபெற இருக்கிறது .

மே 19 மாலை 5 மணியளவில் கல்லடி ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம திருக்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு இடம் பெறும்.

மே 20 ஆம் தேதி கல்லடி விபுலானந்த மணிமண்டபத்தில் சிறப்பு பொது நிகழ்வு காலை 9:30 மணி முதல் 11 30 வரை நடைபெறும்.
மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மந்திர தீட்சை இடம் பெற இருக்கிறது .

இதேவேளை, சனிக்கிழமை 20 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை சிறப்பு பொது நிகழ்வு மணிமண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
அங்கு வரவேற்புரையை பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் நிகழ்த்த, தலைமை உரையை இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ராத்மானந்த ஜி மஹராஜ் நிகழ்த்துவார்.
இந்தியா காசி ராமகிருஷ்ணமட தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் வாழ்த்துரை வழங்குவார்.

பின்னர், புத்தக மற்றும் இறுவெட்டு வெளியீடு இடம்பெறும் .
தொடர்ந்து உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜ் வாழ்த்துரை வழங்குவார்.

ராமகிருஷ்ண மிஷன் பணிகளில் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம் பெறும்.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ மகராஜ் நன்றியுரை வழங்குவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :