கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் இராசையா ஸ்ரீவேல்ராஜாபாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளரும் வங்கியாளருமான இராசையா ஸ்ரீவேல்ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை (29.04.2023) அன்று இடம்பெற்ற புதிய இயக்குனர் சபை தெரிவின்போதே இவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மேலும் இதன் உப தவைராக இராஜகோபால் நடராஜா தெரிவு செய்யப்பட்டதுடன் இவர்களைத் தவிர ஏழு பேர் கொண்ட இயக்குனர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் அரசரெத்தினம், மார்க்கண்டு லோகராஜா , கிருஷ்ணபிள்ளை நாகராஜா, அன்புமணி ராஜினி, நிபோஜனா பற்மராஜா, தவராஜா வினிதா , குணரெட்னம் கேதீஸ் , ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :