இடமாற்ற விடயத்தில் அசமந்தம்-மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்



பாறுக் ஷிஹான்-
புதிய ஆளுநர் எமது இடமாற்ற விடயத்தில் அக்கறை கொண்டு உரிய முறையில் நடைமுறைப்படுத்த ஆவண செய்வாராயின் மனித உரிமை ஆணைக்குழுவில் இடமாற்றம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டினை மீள வாபஸ் பெற தயாராக உள்ளதாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவை சங்க தலைவர் ஏ.ஜி முபாறக் தெரிவித்துள்ளார்.
முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ. ஸி அப்துல் அஸீஸ் ஊடாக முறைப்பாட்டினை கையளித்த பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்று மனித உரிமை ஆணைக்குழுவின் உரிய முறையில் வருடாந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக ஒரு முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.கிழக்கு மாகாணத்தில் வருடாந்த இடமாற்றம் தற்போது இடம்பெற்று வருகின்ற போதிலும் நிறுவனங்களின் தலைவர்கள் உரிய காலங்களில் உத்தியோகத்தர்களுக்கு விடுவிப்பு வழங்காமையினால் இடமாற்றம் என்பது தேவையற்ற ஒன்றாக மாறி வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக நாங்கள் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கான பிரதி பிரதம செயலாளர் இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் கடிதங்களை அனுப்பினோம்.ஆனால் இந்த கடிதங்கள் தொடர்பில் உரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் கடிதங்களை அனுப்பி இருந்தோம்.எனினும் எதுவித பதிலும் எமக்கு வழங்கப்படாமையினால் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் விடுவிப்பு செய்யப்படாமல் இருக்கின்ற பெரும்பாலான அலுவலகங்கள் இருக்கின்றன.இதில் சகல அலுவலகங்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.தற்போது முதல் கட்டமாக 5 அலுவலகங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளோம்.அந்த வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் பிரதி நீர்பாசன பணிப்பாளர் அலுவலகம் அக்கரைப்பற்று மாநகர சபை உள்ளிட்ட இவ்வாறு முறைப்பாடுகளை தற்போது செய்துள்ளோம்.

2020 ,2021, 2022, ஆண்டு இடமாற்றங்கள் இடம்பெறவில்லை.2023 ஆண்டில் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இது வரை உரிய முறையில் விடுவிப்பு செய்யப்படாமல் இருக்கின்றார்கள்.இவ்வாறு விடுவிப்பு செய்யப்படாமல் இருப்பதனால் சில அலுவலகங்களில் மேலதிக ஆளணி அதிகரித்துள்ளது.இன்னும் சில அலுவலகங்களில் ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் தங்களது சேவைகளை உரிய காலங்களில் பெற்றுக்கொள்வதில் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இதே வேளை சில அலுவலகங்களில் ஆளணி மேலதிகமாக இருப்பதனால் முழுமையான கடமை பொறுப்புகள் வழங்கப்படாமலும் இருக்கின்ற சூழல் காணப்படுகின்றது.இந்நிலைக்கு நிறுவனங்களின் தலைவர்களின் அசமந்த போக்கும் ஒரு காரணமாகும்.எனவே இவ்வாறான விடயங்களை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் நாங்கள் இந்த முறைப்பாட்டினை செய்துள்ளோம் .எனவே புதிய ஆளுநர் எமது விடயத்தினை முறையாக செய்து தருவாராயின் மனித உரிமை ஆணைக்குழுவில் இடமாற்றம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டினை வாபஸ் பெற தயாராக உள்ளதாக என குறிப்பிட்டார்.

இதன் போது அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவை சங்க தலைவர் ஏ.ஜி முபாறக் சங்கத்தின் பிரதி செயலாளர் கே.எம். பாயிஸ் பொருளாளர் யு.எல்.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :