காரைதீவு கண்ணகை அம்மனின் வைகாசி திருக்குளிர்த்தி திங்கட்கிழமை ஆரம்பம்!வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு பெருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகின்றது.

இச்சடங்குப்பெருவிழா தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று ஜுன் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும் எனஆலய தர்மகத்தாக்களுள் ஒருவரும் பிரதம பொறியியலாளருமான பரமலிங்கம் இராஜமோகன் தெரிவித்தார்.

30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
05ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள்(6) செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 12ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :