கிழக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொண்டமானின் நியமனம் வழிவகுக்கும்;.-புதிய ஆளுநருக்கு யஹியாகான் வாழ்த்துஏ.எம்.அஸ்லம்-
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக நியமனமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு செந்தில் தொண்டமானின் நியமனம் வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் யஹியாகான் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெகுவாக பாதிக்கப்பட்ட, நாட்டுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும் மலையக சமுகத்தை சேர்ந்த செந்தில் தொண்டமான் நிச்சயமாக கிழக்கில் முஸ்லிம் சமுகம் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்ப்பார் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமுகத்துக்கு உள்ளது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் .மு.கா. ஸ்தாபக தலைவர் மரஹூம் அஷ்ரபும் எவ்வாறு தத்தமது சமுக விடயங்களில் ஒன்றுபட்டு செயற்பட்டார்களோ அதேபோல் ஆளுநர் செந்தில் தொண்டமானும் மு.கா..கட்சியுடன் நெருக்கத்தை பேனுவார் என எமது கட்சியும் தலைமையும் நம்பிக்கை கொள்கிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக எமது தலைவர் ரவூப் ஹக்கீம் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கூறியுள்ளமையை நாம் பாராட்டுகின்றோம்.

இன, மதம், கட்சி வேறுபாடு துறந்து செந்தில் தொண்டமான் சிறப்பாக ஆளுநர் பதவியை மேற்கொள்ள மீண்டும் வாழ்த்துகிறேன் என்றும் யஹியாகான் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :