சம்மாந்துறையில் கவிஞர் பாறூக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழாவி.ரி. சகாதேவராஜா-
ழத்தின் முக்கியமான நவீனகவிஞர் எச்.எம். பாறூக் எழுதி தாயதி வெளியீடாக வெளிவந்த "காணாமல் போன சில ஆண்டுகள்" நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (21) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் மன்சூர் ஏ காதிர் உள்ளிட்ட பிரமுகர்கள் நயவுரை நிகழ்த்தினர்.

தாயதி நிறுவுனர் தில்லை அம்மா சார்பில் எச். எம். பாறூக்கிடமிருந்து காரையன் கதன் ஃபஷ்றி ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் கவிஞர் எழுத்தாளர்
HM பாறூக் எழுதிய "காணாமல் போன சில ஆண்டுகள்" கவிதைத்தொகுப்பு நூல் வெளியீடு விழாவில் இலக்கிய வாதிகள் அபிமானிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :