வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவம் எதிர்வரும் யூலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் உதவிக் குரு கோபிநாத சர்மா உதவியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
வழக்கம்போல அன்னதானம் மற்றும் பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கதிர்காமம் முன் கூட்டி வருவதால் உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல்விழா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு தற்பொழுது பெருந்திரளான பக்தர்கள் அங்கு பாதயாத்திரையாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இலங்கையின் அதிநீண்ட கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவ பாதயாத்திரை எதிர்வரும் 6ஆம் திகதி சந்நிதியில் ஆரம்பமாகின்றது.
கதிர்காமம் செல்லும் பாதயாத்திரை அடியார்கள் உகந்தை மலை முருகன் ஆலயவளாகத்தில் தங்கியிருந்து செல்வதுதான் வழக்கம்.
இம் முறை கதிர்காமத்திற்கான ஆடிவேல் விழா எதிர்வரும் யூன் மாதம் 19 இல் கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment