அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்திற்கு 2023/2025 ஆண்டிற்கான புதிய நிருவாகம் தெரிவு



2023/2024 ம் ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் மற்றும் 2023/2025 ஆண்டிற்கான புதிய நிரருவாக தெரிவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் (AASL) தலைவர் திரு.பாலித பெர்ணான்டோ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் அத்துடன் பூரண வழிகாட்டலுடன் இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிகளான திரு. V.மோகனகுமார் மற்றும் திரு. AAUP.ரூபஸ்ரீ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடந்த 02.04.2023 திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் (Sea Breeze Restaurant) நடைபெற்றது.

15 பிரதேச செயலகங்கள், இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம்

ஆகிய 16 சங்க பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2023/2025 ம் ஆண்டுக்கானபுதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவராக SGVU. நாராயண ( மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்) , செயலாளராக அலியார் பைஸர் (உடற்கல்வி ஆசிரியர்) பொருளாளராக ALM. அஸ்ரப் (இலங்கை இரானுவம்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக உப தலைவர்களாக S. அரசரட்ணம் (Rtd.ADE), A. சப்ரி நஸார் (District Coach), ILM. இப்ராஹிம் (ISA), JM. உபசேனே (District Athletic Coach), SMB. ஆசாத் ( Instructor Phy-Edu SEUSL), MM. அஸ்மி (உடற்கல்வி ஆசிரியர்), K. கங்காதரன் (ADE) ஆகியோரும் , உப செயலாளர்களாக IM. கதாபி (நிர்வாகம்) (Instructor Phy-Edu SEUSL) , MHM. அஸ்வத் (தொழில்நுட்பம்) (Sports Officer) , உப பொருளாளராக L. சுலக்ஸன் (Sports Officer), கணக்கு பரிசோதகர்களாக MH. ஹம்மாத் (ISA), K. சாரங்கன் (Sports Officer), ஊடக பொறுப்பாளராக MYM.றகீப் (உடற்கல்வி ஆசிரியர்) ஆகியோரும் சங்க அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் போசகர்களாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் (AASL) தலைவர் திரு. பலித் பெர்ணான்டோ, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும் (GA) சங்கத்தின் அலோசகர்களாக முன்னாள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் MA. நபார், MIM. அமீர் அலியும் தெரிவு செய்யப்பட்டனர்.

8வருட காலமாக இயங்காது மந்தகதியில் காணப்பட்ட மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை வினைத்திறனானதும், செயற்றிறன் உடையதுமாக மாற்றியமைக்க பல முன்மொழிவுகள் முன் மொழியப்பட்டன. இதில் முக்கிய அம்சமாக இவ்வருடத்திற்கான திட்டமாக மெய்வல்லுனர் வீரர்களுக்கான, மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான, மெய்வல்லுனர் தொழில்நுட்பவியலாளர்களுக்கான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டதோடு, புதிய மெய்வல்லுனர் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் செயற்றிட்டமும், அதனை தொடர்ந்து மாவட்ட மெய்வல்லுனர் போட்டியும் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

புதிய நிர்வாகத்தை பாராட்டுவதோடு எதிர்கால திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :