இலங்கையில் உள்ளவா்கள் துருக்கி நாட்டுக்கு பிரயாணம், தொழில் ,கல்வி, மற்றும் சுற்றுப்பிரயாணிகள் அந் நாடடுக்குச் செல்வதற்கு இலகுவாக கொழும்பு 1ல் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஈஸ்ட்வெஸ்ட் டவரில் 5ஆம் மாடியில் துருக்கி விசா அலுவலகம் 02.03.2023 ஆம் திகதி துருக்கி துாதுவா் ,டெமி செக்குரோகுழு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துருக்கிய நாட்டு கம்பனி ஊடாக விசா அலுவலகங்கள் ஏற்கனவே 5 நாடுகளில் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் உள்ளுர் முகவர் நிறுவனங்கள் ஊடாக துருக்கி நாட்டுக்கு தொழிலாளர்கள் 2000 பேர் அங்கு தொழிலுக்காக செல்லஉள்ளதாகவும். அவா்கள் சகல விசா, மருத்துவம் பிரயாணச சீட்டு போன்ற விடயங்கள் துருக்கி நாட்டின் கம்பனி ஊடாகவே மேற்கொள்ளப்படுமென துருக்கியத் துாதுவர் கருத்துத் தெரிவித்தார்
0 comments :
Post a Comment