கோலாகலமாக நடைபெற்ற சம்மாந்துறை கோரக்கர் கௌரவிப்பு விழா !



மாளிகைக்காடு நிருபர்-
ம்மாந்துறை நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து நடத்திய முன்னோடி இளைஞர்கள் கௌரவிப்பு விழா மகளிர் தினமான இன்று (08) கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் கட்டடத் திட்டச் செயலாளரும் ஜெய் கட்டிட நிர்மாண ஆலோசனை நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜெயகுமார் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியலாளர் எந்திரி ஏ.எல்.எம். நவாஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ். ஜயலத், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாறக் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்வி, சமூக சேவை, தலைமைத்துவம் போன்ற துறைகளிலும் இளைஞர் சேவையிலும் சிறந்து விளங்கிய 4 இளைஞர்களுக்கு இலட்சிய இளைஞர் விருதுகளும், 45 இளைஞர்களுக்கு கௌரவ அங்கத்துவ நற்சான்றிழும் வழங்கப்பட்டன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :