கட்சியின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் கே.பீ. ரபீக் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
எதிர்நோக்குகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த விடயங்களும் கலந்தாலோசிக்க ப்பட்டது.
இதன் போது உரையாற்றிய கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் கே.பீ. ரபீக் அவர்கள், தான், புதிதாக நியமிக்கப்பட்ட கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் என்ற வகையில் அரசியலில் கடந்து வந்த பாதை பற்றி விளக்கம் அளித்ததுடன் தனக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைத்ததையிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்துடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் இங்கு கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment