சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்களானா ஏ.ஏ.சி.எம்.நிஷாம், ஏ.எம்.நபீல், எம்.ஏ.தம்பிக்கண்டு ஆகியோர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment