75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற"இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ.ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அலுவலகர் எம். எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஏ.எம்.ஹிசாம் அவர்களின் ஏற்பாட்டிலும் சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் இன்று (09) மரநடுகை நிகழ்வுகள் கூபா மற்றும் ஸாஹிரா கல்லூரி பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.
இதன் போது கூபா பள்ளிவாசல் தலைவர் எ.எ.பசீர்,ஸாஹிரா கல்லூரி(தேசிய பாடசாலை) பள்ளிவாசல் நிருவாகிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக சுற்றுச் சூழல் உத்தியோகத்தர் எம்.வை.றிஸ்மியா பேகம்,தேசிய சம்மேளன உறுப்பினர் எ.எ.சிப்னாஸ்,சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment