கல்விக்கு உதவுவோம் விசேட வேலைத்திட்டம் வருமானம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு




றியாஸ் ஆதம்-
ட்டாளைச்சேனை பிரதேசத்தில் வருமானம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றினை SECDO SRILANKA அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக முதற்கட்டமாக 30மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (18) அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.அஷ்ரத் பிரதம அதிதியாகவும், கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்வர் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் உரையாற்றுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொருட்களின் விலையேற்றம் காரணமாக நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வருமானம் குறைந்த குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் கூட தமது கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றைக் கருத்திற்கொண்ட எமது அமைப்பு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை வழங்கி வருகின்றது.

எமது அமைப்பின் கல்விக்கு உதவுவோம் திட்டத்தின் ஊடாக முதற்கட்டமாக 30மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் பலருக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம்.

எமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற எமது சகோதரர்கள், நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் என சகலருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :