அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாயலில் மாபெரும் இரத்ததான முகாம்



சியாத்.எம்.இஸ்மாயில்,
பட உதவி : கே.மாதவன்-

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கில், அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாயலினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் பள்ளிவாயலில் சனிக்கிழமை (18) நடைபெற்றது.

அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.எம்.றியாட் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம் முகாமில் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எச்.எம். சனூபர், அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி, மாவட்ட நீதிபதி என்.எம். அப்துல்லாஹ், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை.றாசீத் , பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் கே.எல்.எம்.நக்பர் மற்றும் அரசியல் வாதிகள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், இதில் இரத்த கொடையாளர்கள் 288 பேர் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியதுடன் 248 இரத்த சேகரிப்புக்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :