சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஹதிய்யா பாடசாலைகளை முன்னோக்கி கொண்டு செல்லுதல்
எனும் தொனிப்பொருளில் அஹதிய்யா பாடசாலைகளின் முக்கியத்துவம் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் மேற்பார்வையில் கீழ் அம்பாறை மாவட்ட அஹதிய்யா சம்மேளத்தின் உதவித் தலைவரும், தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளத்தின் தலைவருமான மௌலவி ஏ.எம்.அன்சார் (தப்லீகி) தலைமையில் இடம்பெற்றது.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் பி.ப.12.00 மணி வரை பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதை தவிர்க்குமாறு கோரி பிரத்தியேக வகுப்பு நடத்தும் கல்விநிலைய பணிப்பாளர்களிற்கு இதன்போது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், தாறுல் குர்ஆனிய்யா அஹதிய்யா பாடசாலையின் தலைவர் ஏ.ஆர்.ஏ.அஷ்ரப், அஸ் ஸபீனா அஹதிய்யா பாடசாலையின் தலைவர் ஏ.ஆர்.எம்.நளீம், தாறுல் குர்ஆனிய்யா அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தில் செயலாளர் ஏ.ஜே.எம்.இம்தாத், அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment