35வது வருடமாக அரங்கேற்றம் செய்யப்பட்ட லவகுசா கூத்து.



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
லையகத்தின் பாராம்பரிய கலைகளில் ஒன்றான லவகுசா கூத்து அரங்கேற்றம் பொகவந்தலாவ பெரிய எலிப்படை கீழ் தோட்டத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இந்த பாராம்பரிய கூத்துகளிள் ஒன்றான இந்த லவகுசா என்ற பெரிய எலிப்படை கீழ் பிரிவு தோட்டத்தில் 35வது வருடமாக 18.02.2023. சனிக்கிழமை இரவு அரங்கேற்றப்பட்டது.

பெரிய எலிப்படை தோட்டத்தை சேர்ந்த ஜீ.கனகராஜாவின் வழிநடத்தலின் கீழ்
35வருடமாக இந்த லவகுசா என்ற கூத்து ஜந்து வருடங்களுக்கு ஒரு முறை
அரங்கேற்றப்பட்டு வருவதோடு இம்முறை லவகுசா கூத்தின் கதாபத்திரங்களில் ஹட்டன் கல்விவலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் தரம் 01 தொடக்கம் தரம் 06வரையிலான மாணவர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

லவகுசா தொடர்பான பயிற்சிகள் குறித்த மாணவர்களுக்கு ஜீ.கனகராஜா
ஆசிரியரினால் ழூன்று மாதங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தமை
குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு
சான்றுதல்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதேவளை லவன்,குஜன்,தங்கால், இராமன்,சீதை,வன்னான், வன்னாத்தி, பூமிதேவி, வசிஷ்டர் போன்ற காதாபாத்திரங்களும் உள்ளடங்கின

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :